ஸ்ரீ.தீப்பாஞ்சாள் அம்மன் திருக்கோவில்



ஸ்ரீ.தீப்பாஞ்சாள் அம்மன்  திருக்கோவில்

சடையாண்டிக்குப்பம்.

ஆன்மிக அன்பர்களுக்கு வணக்கம்!

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம் கண்டங்கலம் ஒன்றியம்

சடையாண்டிக்குப்பம் கிராமத்தில் சங்கராபரணியின் கரையில்

அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ.தீப்பாஞ்சாள் அம்மன் திருக்கோவிலின்

அமைப்பை காணலாம்.

திருக்கோவிலின் முன் மண்டபம் பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்

கட்டப்பட்டது. மண்டபத்தின் கீழ் பகுதியில் இச்ஷா சக்தி கிரியாசத்தி

ஞானசத்தி என போற்றும் திருசூலம் வடிவம், சற்று உள் நுழைந்தால்

பழையகாலத்தின் திருக்கோவில் உள்ளது. அம்மனின் வலது புறத்தில்

சித்தி விநாயகர் காட்சி தருகிறார். இடது புறத்தில் பாலமுருகன் காட்சி

தருகிறார். மூலவரின் அருகில் சென்றால் வலது புறத்தில் சூரியனும் இடது

புறத்தில் சந்திரனும் காவல் தெய்வங்களாய் காட்சி தருகின்றனர். மூலவர்

ஸ்ரீ.தீப்பாஞ்சாள் அம்மன் அமர்ந்த நிலையில் வலது காலை கீழ் நோக்கி

தாமரை மலர் மீது பாதத்தை வைத்து உள்ளார். இடது காலை மடக்கி

வைத்துள்ளார். இடது கால் மீது இடது கையை வைத்துள்ளார். வலது

கையால் அபயம் தந்து காட்சி தருகிறார். பின் உள்ள தீயினில்

நின்றகோலத்தில் காட்சி தருகிறாள். அம்மனின் எதிர் திசையில்

மின்னோடியான் வீச்சரிவாள் உடன் நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.

திருக்கோவிலின் எதிர் திசையில் நவகிரக நாயகி உடன் ராகு. கேது.

பகவான் காட்சி தருகின்றனர். இதன் தனி சிறப்பு அரசமரத்தடியில் ராகு.

கேது. பகவான் முழு உருவத்தில் காட்சி தருகின்றனர். திருமண தடை,

குழந்தை வரம், கணவன் மனைவி பிரச்சனை தடுத்து தீர்வு காண

பக்தர்களின் கையால் அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. அம்மனின்

தென் திசையில் கிழக்கு மரத்தடியில் தனி சனிஸ்வரன் அருள் பாலித்து

வருகிறார். இந்த சனிஸ்வரனை ஏழரை சனி, அஷ்டம சனி, கொங்கு சனி,

பாத சனி சனி பகவனால் ஏற்படும். அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு

கானும் படி பக்தர்கள் சனி பகவானை சுற்றும் போது நர்த்தன விநாயகர்

மற்றும்

தஷ்ணமமூர்த்தியின்

விழும்படி

அமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நர்த்தன விநாயகர் மற்றும் குரு

குரு

பார்வை

தஷ்ண முர்த்தி தென் திசையில் அமைந்து காட்சி தருகின்றனர். குரு

தஷ்ண முர்த்தியின் பார்வையில் இலட்சுமி வாசம் செய்யும் நெல்லி கணி

மரம் அமைந்துள்ளது. மேற்கு திசையில் சக்தியின் அண்ணன் என

அழைக்கப்படும் விஷ்னு பகவான் காட்சி தருகிறார். அன்னைக்கு மேற்கு

திசையில் தல விரிச்சகமாய் வேம்பு (வேப்பமரம்) மரம் விளங்குகிறது.

வேம்பு மரத்தடியில் சுயம்பு புற்று உள்ளது. புற்றிற்கு அருகில்

ராகு.கேது.நாகதேவதை ஒரு பக்தரின் திருக்கையால் செய்த சிறு

சிவலிங்கம் திருவண்ணாமலை வடிவில் உள்ளது. வடக்கு திசையில்

பிரம்மா அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். அதை தொடர்ந்து

விஷ்னுதுர்கை வடதிசையில் அருள்பாளிக்கின்றார். விஷ்ணுதுர்கை

பார்வையில் பரணி சங்கரராபரணி நதி. இத்திருதலம் திருமண. தடை

கணவன் மனைவி பிரச்சனை குழந்தை பாக்கியம் ராகு.கேது தோஷம் சனி

பகவான் தோஷம் பரிகார தலமாய் விளங்குகிறது. இத்தலத்தில் குரு

பெயர்ச்சி சனிபெயர்ச்சி ராகு.கேது பெயர்ச்சி நடைபெறுகிறது.

மாதத்திருவிழா மாதபௌணர்மி விழா நடைபெறுகிறது. ஆண்டு

திருவிழா வைகாசி விசாகம்(பௌணர்மி) அன்று ஐந்து திருவிழா

நடைபெறுகிறது. அடுத்த விடியோவில் ஸ்ரீ.தீப்பாஞ்சாள் அம்மன் தல

வரலாறை சு!ருக்கமா காணலாம்!!!


Comments