ஸ்ரீ.தீப்பாஞ்சாள் அம்மன் வரலாற்றை

முன்னுரை:

சுயம்பு

ஸ்ரீ.தீப்பாஞ்சாள் அம்மன் திருக்கோவில்

(பாஞ்சாலி சமேத- தண்டுக்கரை பரம்பரை)

சடையாண்டிக்குப்பம்,

விழுப்புரம் மாவட்டம்.605 102.

ஸ்ரீ.தீப்பாஞ்சாள் அம்மன் வரலாற்றை காண்போம். அதற்கு முன்

பண்ணெடுங்காலத்திற்கு முன் பெண்கள் பல்வேறு வண்கொடுமைக்கு

ஆளாகும் நிலை இருந்தது. அந்த காலத்தில் கணவன் இறந்த பின்

உடன்கட்டை ஏறுதல் மற்றும் தவறு செய்ததால் அந்த பெண்களை தீயில்

இறங்கி ஏறும் முறையும் இருந்து வந்தது...அவ்வாறு தீயில் இறங்கிய

பெண்களை மக்கள் தங்கள் வட்டார மொழிகளுக்கு ஏற்ற வகையில்

வாய் மொழியாக பல்வேறு பெயர்களை

கொண்டு அழைத்தும்

அவர்களை தெய்வமாக வணங்கியும் வந்துள்ளனர் அவற்றுள்

சிலவற்றை பார்ப்போம்.

தீப்பாஞ்சி. தீப்பாய்ந்த. நாச்சியார். கோணம்மாள். பாஞ்சாலி. என பல்வேறு

பெயர்களில் அழைத்தார்கள். ஆனால் சடையாண்டிக்குப்பம் கிராமத்தில்

சங்கராபரணி ஆற்றங்கரையில் எழுந்து அருள்பாலிக்கும் அன்னை

ஆதிபராசக்தியின் வடிவமான அன்னை தனது திருவிளையாடலில்

அன்னை தானே விரும்பி தீயை மூட்ட செல்லி தீயில் பாய்ந்தமையால்

அன்னை ஸ்ரீ.தீப்பாஞ்சாள் அம்மன் என அனைவராலும்

அழைக்கப்படுகிறாள்

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அன்னை

ஆதிசக்தியின்

வடிவமாய் விளங்கும் ஸ்ரீ தீப்பாஞ்சாள் அம்மன் தல புராண சுருக்க

விளக்கவுரை:

சக்தி ஒன்று சமயம் பதினாறென பெரியவர்கள் கூறுவர். சக்தி என்பவள்

ஆதிசக்தியாய் விளங்கும் ஆதிபராசக்தி இவ்வுலகை படைத்து

பிள்ளையார், விஷ்ணு, சிவன் என்ற மூவரையும் படைத்தாள் விஷ்ணு

பிரம்மாவை படைத்தார்.

விஷ்ணுவுக்கு லட்சுமியையும் ,பிரம்மாவுக்கு சரஸ்வதியையும்,

சிவனுக்கு பார்வதியையும் சக்தி படைத்தாள். பின்பு உலகை இயக்க

தேவர்களும், அசுரர்களும் படைக்கப்பட்டு இவ்வுலகம் இயங்க

துவங்கியது.

ஸ்ரீ தீப்பாஞ்சாள் அம்மன் தல புராணம் பற்றி அறியலாம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் படைத்த உலகத்தை கண்டு

மகிழ்ந்தபடி பொன்சிரிப்பை வெளிப்படுத்தினால் ஆதிசக்தி. அப்போது

மனித பிறப்புகளை கண்டு தான் இவ்வுலகில் வாழவேண்டுமெனயென்னி

இச்சை கொண்டாள் ஆதிசக்தி. அந்நேரம் அசுரன் ஒருவன்

மும்மூர்த்திகளை நோக்கி கடும் தவம் புரிந்துவந்தான். தவத்தை கண்டு

மும்மூர்த்திகளும் மகிழ்ந்து அசுரன் முன் தோன்றி அசுரனே உன் தவத்தை

கண்டு மகிழ்ந்தோம் உனக்கு என்ன வரம் வேண்டுமென கேட்டனர்.

அசுரன்,உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் தாயேயென வணங்கும்

அன்னை ஆதிசக்தி மண்ணுலகில் பிறந்து தாய்மையடையாமல் கன்னி

பருவத்தில் உள்ளபோது அன்னை ஆதிசக்தியின் திருக்கரங்கலால் மடிந்து

முக்திபெற வேண்டுமென வேண்டினான். அதன்படியே மும்மூர்த்திகளும்

வரமளித்து மறைந்தனர் .

அசுரன் தன் அசுரபலத்தால் உலகை கைப்பற்றி ஆட்சி செய்துவந்தான்.

அவன் ஆட்சியில் தேவர்கள் முதல் அனைத்து உயிரினங்களையும்

இன்னல்படுத்தினான். இதனை தேவர்களும்,

மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர்.

முனிவர்களும்

அங்ஙனம் மண்ணுலகில் வாழும் தவ வலிமைகொண்ட முனிவர் அவரது

இல்லத்தரசிக்கு அன்னை ஆதிபராசக்தி மகளாக பிறக்க வேண்டுமென

தவம்புரிந்து வந்தார். ஆதிசக்தி மனம் மகிழ்ந்து முனிவருக்கு தக்க

தருணத்தில் மகளாய் அவதரிப்பேன் என கூறி மறைந்தாள்.

முனிவர் இல்லற வாழ்வில் ஈடுபட்டு ஏழு ஆண் குழந்தைகளை

ஈன்றெடுத்தார். ஆதிசக்தி தனக்கு கொடுத்த வரத்தை மறந்துவிட்டாளோ

எனயென்னி மனமுடைந்தார் முனிவர். அந்நேரம் அசுரனின் ஆதிக்கம்

அதிகரித்ததால் ஆதிசக்தியிடம் அசுரனைபற்றி முனிவர்கள்

முறையிட்டனர்.

அந்நேரம் சக்தியிடம் வரம்பெற்ற முனிவர் அவரது இல்லத்தரசி மற்றும்

ஏழு பிள்ளைகளோடு காட்டுப்பகுதியில் குடியேறினர். ஆதிசக்தி தனக்கு

எப்போது மகளாக பிறப்பாள் தனக்கு எப்போது முக்தி அளிப்பாளென

என்னிய அக்கனமே காட்டுக்குள் குழந்தையின் அழுகுரல் ஒன்று

ஒலித்தது. அக்குரலை கேட்ட முனிவரும் அவரது இல்லத்தரசியும்

காட்டுக்குள் சென்று பார்த்தனர் அங்கே குழந்தை ஒன்று இருப்பதையும்

அக்குழந்தை பெண் குழந்தையாக இருப்பதையும் கண்டு மகிழ்ந்தனர்.

ஆதிசக்தியே தனக்கு மகளாய் கிடைத்ததாக என்னி மகிழ்ந்து வாழ்ந்து

வந்தனர்.

காலங்கள் ஓடியது ஆதிசக்தி ஏழு அண்ணன்களோடு துள்ளித்திரிந்தாள்.

பின்னர் ஆதிசக்தி முனிவருக்கும் அவர் இல்லத்தரசிக்கும்

முக்தியளித்தாள். பின் அண்ணன்கள் ஒவ்வொருவருக்கும் திருமணம்

நடந்து முடிந்தது. கன்னிப் பருவமடைந்த மங்கையாய் நாட்டு மக்களுக்கு

அருள் வாக்கு கூறிவந்தால் ஆதிசக்தி. நாட்டு மக்களும் உயிரினங்களும்

அருள் வாக்கு தரும் அன்னையை தாயே என அழைத்தனர்

நாட்டுக்கு அருள்வாக்கு கூறும் பெண் வீட்டு வேலை செய்யவில்லையென

ஏழு அண்ணிகளும் அன்னையை தவறாகபேசி பல துன்பங்களை

கொடுத்துவந்தனர். வீட்டுக்கு வரும் ஆண்களிடம் தங்கள் தங்கை

தவறாக நடந்துகொள்வதாக அன்னையின் அண்ணன்களிடம் அண்ணிகள்

அனைவரும் உரைத்தனர். இதைக்கேட்ட அண்ணன்களும் நாளடைவில்

தங்கையின் நடத்தையை சந்தேகித்தனர். ஆதிசக்தியும் தான் அவதரித்த

நோக்கம் முடியப்போவதை என்னினார்.

நாளடைவில் அண்ணன்களுக்கும் சந்தேகம் அதிகரிக்கவே அன்னையின்

நன்நடத்தையை நிருபிக்க அக்கினி பிரவேசம் செய்ய வேண்டுமென

வர்புருத்தினர். சினம் கொண்ட அன்னை அச்சமயமே தீ மூட்டச்சொல்லி

தீயினுள் பாய்ந்தால் அதுசமயம் அவ்வழியாக வந்த அசுரன் தீயினுள்

பாய்ந்த அன்னையை கண்டு எள்ளி நகையாடினான். அசுரனை கண்டு

கோபமடைந்த அன்னை அசுரனை அழித்து அசுரனுக்கு முக்தியளித்தாள்

இதனைக் கண்ட அண்ணன்களும், ஊராரும், உறவுகளும் அன்னையை

தீயைவிட்டு வெளியேறும்படி வேண்டினர். தாம் அவதரித்த நோக்கம்

முடிவடைந்ததாகவும் தான் வெளியேவர முடியாதெனவும் கூறினால்

அன்னை. இதுநாள்வரை தங்களின் தங்கையாக வாழ்ந்தவள் ஆதிசக்தி

என்பதை அறிந்த ஏழு அண்ணன்களும் அவளுக்கு இழைக்கப்பட்ட

துன்பங்களையென்னி வருந்தி மண்டியிட்டனர். பின்னர் ஆதிசக்தியை

தங்கள் குலதெய்வமாக வழிபட வேண்டுமென ஆதி சக்தியிடம்

முறையிட்டனர்.

ஆதிசக்தியானவள் கிழக்குநோக்கி வரும்படியும் தான் கங்கைவராக

(சங்கராபரணி நதி) நதிக்கரை ஓரம் வேம்பு மரத்தடியில் சுயம்பாக புற்று

வடிவமாய் இருப்பதாக கூறி மறைந்தால் ஆதிசக்தி தீயினுள் பாய்ந்ததால்

தீப்பாஞ்சால் அம்மன் என அழைக்கப்படுகின்றாள்,

அன்னை ஆதிபராசக்தி கன்னியாக அமர்ந்த இடம் கங்கைவராக

(சங்கராபரணி நதி) நதிக்கரையோரம் சடையாண்டிக்குப்பம்.

அன்னையின் முதல் திருத்தலம் - சடையாண்டிக்குப்பம்.

ஆதிசக்தி அவதரித்த இடம்: செஞ்சி அருகே உள்ள தண்டுக்கரை என்கின்ற

சிரிய கிராமம்.

----சுபம்-----


Comments